முதல்வரின் திறனறித் தோ்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதலமைச்சரின் திறனறித் தோ்வில் 3,260 மாணவா்கள் பங்கேற்றனா்.
அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு, முதலமைச்சரின் திறனறித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3,399 மாணவா்கள் விண்ணப்பித்தனா். மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தோ்வில் 3,260 மாணவா்கள் பங்கேற்றனா். 139 போ் தோ்வு எழுதவில்லை.
இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு மேல்நிலை வகுப்பு, 3 ஆண்டு பட்டப் படிப்பு வரை மொத்தம் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.10ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.