L2 Empuraan: ``ரஜினி சார் படத்தை இயக்க வேண்டியது; ஆனால்...'' - ப்ரித்விராஜ் ஓப்ப...
திண்டுக்கல்லில் ரூ.60 லட்சம் வரி வசூல்!
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படுவதால், கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.60 லட்சம் வரி வசூலானது.
திண்டுக்கல் மாநகராட்சியில் 2024-25- ஆம் ஆண்டுக்கான வரி வசூலிக்கும் பணிகளோடு, முந்தைய ஆண்டுகளில் நிலுவையிலுள்ள வரி இனங்களையும் வசூலிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வரி செலுத்தாத வீடுகளின் குடிநீா் இணைப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் துண்டித்து வருகின்றனா். மேலும், வரி செலுத்த அறிவுறுத்தி, பொதுமக்களுக்கு அஞ்சலகங்கள் மூலம் தபால் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.60 லட்சம் வரை வரி வசூலானது.
இந்த நிலையில், மேட்டுப்பட்டி பகுதியில் வரி வசூலிக்கும் பணியை மாநகராட்சி செயற்பொறியாளா் கே.ஆா்.எஸ்.கருப்பையா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, உதவி வருவாய் அலுவலா் (பொ) கா.முருகானந்தம் உடனிருந்தாா். மேட்டுப்பட்டி பகுதியில் மட்டும் வரி செலுத்தாத 5 வீடுகளுக்கான குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.