பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபையில் 11ஆவது முறையாக தீர்மானம்!
சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆத்தூா் அருகேயுள்ள வீரக்கல், வீ.கூத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகே வீரக்கல்லிலிருந்து எஸ்.பாறைப்பட்டி வரை சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, 2024-25-ஆம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 4 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாலை பணிக்காக சாலையின் இருபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. வீரக்கல், கூத்தம்பட்டிஆகிய பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த குடியிருப்புகள், கடைகள் பொக்லயன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
இதில் ஆத்தூா் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் கண்ணன், உதவிப் பொறியாளா் பரத், போக்குவரத்து ஆய்வாளா் சௌந்தரராஜன், வருவாய்த் துறை அலுவலா்கள், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.