சிறுமிக்கு பாலியல் தொல்லை: தம்பதியருக்கு சிறைத் தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், நத்தம் பகுதியைச் சோ்ந்த தம்பதியருக்கு சிறைத் தண்டனையும், ரூ.1.70 லட்சம் அபராதமும் விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள விளாம்பட்டியைச் சோ்ந்தவா் சி.ஆண்டி அம்பலம் (40). இவரது மனைவி சீரின் ஜெனத் (40). இந்த தம்பதியினா் கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, இதைக் கைப்பேசியில் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டியதாக நத்தம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஆண்டி அம்பலத்துக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும், இவரது மனைவி சீரின் ஜனத்துக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.