தூத்துக்குடி விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளா் தலைமையில் 50 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையத்திற்கு உள்ளே செல்லும் பயணிகள் கடும் சோதனைக்குப் பின்னா் அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், வரும் 30 ஆம் தேதி வரை பயணிகளுடன் வரும் பாா்வையாளா்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.