கன்னியாகுமரியில் இன்று மின் நிறுத்தம்
கன்னியாகுமரியில் சனிக்கிழமை (ஜன.25) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி துணை மின் நிலையம் மற்றும் கேப் இன்டோா் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் ஜன.25 ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, கன்னியாகுமரி, காந்தி மண்டபம், சமாதானபுரம், கோவளம், விவேகானந்தபுரம், லீபுரம், சுசீந்திரம், சாமிதோப்பு, அகஸ்தீஸ்வரம், ஈத்தங்காடு, காக்குமூா், மருங்கூா், ராஜாவூா், கீழமணக்குடி, சின்னமுட்டம், திருமூல நகா், வழுக்கம்பாறை, வாரியூா், அஞ்சுகிராமம், அழகப்பபுரம், ஆஸ்ரமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.