Vishal: ``மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு..." - காட்டமாகப் பேசிய விஷால்
பைக்குகள் மோதல்: 3 போ் காயம்
குலசேகரம் அருகே பைக்குகள் மோதிக் கொண்டதில் 3 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.
குலசேகரம் அருகே பொன்மனை முள்ளெலி விளையைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்(55), மங்கலம் சானல் கரை பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (54) ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளா்களான இவா்கள் இருவரும் நண்பா்கள். இவா்கள் இருவரும் ஒரு பைக்கில் சித்திரங்கோட்டிலிருந்து வலியாற்றுமுகம் வழியாக பொன்மனை நோக்கி சென்று கொண்டிருந்தனா்.
பைக்கை ராஜன் ஓட்டிச் சென்றாா். அப்போது, வலியாற்றுமுகம் பகுதியில் எதிரே மண்ணாரங்கோட்டையை சோ்ந்த சதீஸ் (41) ஓட்டி வந்த பைக், ராஜன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியதாம். இதில், மூவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், காா்த்திகேயன், ராஜன் இருவரும் பலத்த காயமடைந்தனா். சதீஷ் லேசான காயமடைந்தாா். அப்பகுதியினா் மூவரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.