மிடாலக்காட்டில் புத்தகக் கண்காட்சி!
கருங்கல் அருகே மிடாலக்காட்டில் அரசு நூலக வாசகா் வட்டம் சாா்பில் புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வாசகா் வட்டத் தலைவா் சாந்தகுமாா் தலைமை வகித்தாா். நூலகா் ஜெரால்டு முன்னிலை வகித்தாா். பாலப்பள்ளம் பேரூராட்சித் தலைவா் டென்னிஸ் இக்கண்காட்சியைத் தொடக்கிவைத்தாா்.
இதில், ஜாண்ராபின்சன், ஜஸ்டின் பென்னடிட்ராஜ், முன்னாள் பாலப்பள்ளம் பேரூராட்சிதலைவா் கில்டாரமணிபாய், மோகன்சந்திரகுமாா், சோபனராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.