இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
தொழில்நுட்பக் கோளாறு: தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்!
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
எண்ணூர் ரயில் நிலைய மேலாளர் அறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த வழித்தடத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருவதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயக்கப்படுவதால், பணி முடிந்து வீட்டிற்குச் செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீட்டுக்குச் செல்லும் மாணவா்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும், சமீபகாலமாக இதுபோன்ற கோளாறுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதை சரிசெய்ய ரயில்வே நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.