இந்தியா்களுக்காக உருவானது தேசிய கல்விக் கொள்கை: ஆளுநா் ஆரிஃப் முகமது கான்
அம்பேத்கர் மற்றும் அவரது அரசியலமைப்பை அவமதிக்கும் பாஜக ஆர்எஸ்எஸ்: ராகுல்
பாஜக, ஆர்எஸ்எஸ் இணைந்து அம்பேத்கரையும் அவர் உருவாக்கிய அரசியலமைப்பையும் அவமதிப்பதாகக் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது,
காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் நாடு தழுவிய சாதி கணக்கெடுப்பு நடத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடி ஒதுபோதும் சாதி கணக்கெடுப்பு நடத்தமாட்டார், ஏனெனில் அதைக் கண்டு அவர் பயப்படுகிறார். மேலும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை முறியடித்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் இது தொடர்பாக ஒரு சட்டம் கொண்டுவரப்படும்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கோடீஸ்வரர்களுக்காக வேலை செய்வதாகக் குற்றம் சாட்டிய அவர், வேலைவாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டின் செல்வம் அனைத்தும் ஒருசில முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படுவதால், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் மீண்டும் அடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள்.
பாஜகவும், ஆர்எஸ்எஸும் நாட்டில் சுதந்திரத்திற்கு முந்தைய சூழ்நிலையையே விரும்புகின்றன. அங்கு ஏழைக்கு எந்த உரிமைகளும் வழங்கப்படவில்லை, பணக்காரர்களுக்கு மட்டுமே உரிமைகள் வழங்கப்படுவதாக அவர் என்று குற்றம் சாட்டினார்.
அம்பேத்கரையும் அவர் வடிவமைத்த அரசியலமைப்பையும் மாற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நமது அரசியலமைப்பு மாற்றப்படும் நாளில் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினருக்கு எதுவும் மிச்சமிருக்காது என்று ராகுல் பேரணியில் கூறினார்.