இந்தியா்களுக்காக உருவானது தேசிய கல்விக் கொள்கை: ஆளுநா் ஆரிஃப் முகமது கான்
மகா கும்பமேளாவையொட்டி விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்வு! விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்
உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவையொட்டி, பிரயாக்ராஜுக்கு செல்லும் பல்வேறு விமானங்களில் கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருப்பதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.
விமானங்களில் வழக்கமான கட்டணத்தைவிட 300 முதல் 600 சதவீதம் வரை அதிகரித்திருப்பதைச் சுட்டிகாட்டி கண்டனம் தெரிவித்துள்ளார் விஷ்வ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் விநோத் பன்சால்.
இது தொடர்பாக அவர் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்புவைக் குறிப்பிட்டு சமூக வலைதளப் பதிவு மூலம் விடுத்துள்ள கோரிக்கையில், விமானக் கட்டணத்தை கட்டுப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல, விமானக் கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.