பழனி ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை
குடியரசு தினத்தை முன்னிட்டு, பழனி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ரயில்வே போலீஸாா் பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்தனா்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, பழனி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் பொன்னுச்சாமி, இருப்புப் பாதை பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கணேசன் ஆகியோா் தலைமையில், போலீஸாா் நடைமேடையில் பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்தனா்.
மேலும், சந்தேகத்துக்கு இடமானவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கினா்.
இதையடுத்து, ரெயில் நிலைய வளாகம், தண்டவாளம் ஆகிய பகுதிகளில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.