Thalapathy 69: விஜய்யின் கடைசி படம் `ஜனநாயகன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
சேக்கிபட்டியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
மேலூா் அருகேயுள்ள சேக்கிபட்டி ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சத்தில் சேக்கிபட்டியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்தக் கட்டத்தை சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.
இதில் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் வெற்றிச்செழியன், எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் சாகுல்ஹமீது, கொட்டாம்பட்டி குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சண்முகப்பிரியா, அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.