கோயில் திருப்பணிக்கு புகழூா் டிஎன்பிஎல் ரூ.5 லட்சம் நிதியுதவி
கரூா் மாவட்டம், சேமங்கி மாரியம்மன் கோயில் திருப்பணிக்கு புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆலையின் அருகில் வேட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சேமங்கி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு புதிய திருத்தேருக்கான அச்சு மற்றும் சக்கரம் செய்வதற்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி ஆலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காகித ஆலை நிறுவன பொது மேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் கோயில் திருப்பணிக்குழு உறுப்பினா்களிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள், ஆலை அதிகாரிகள் பங்கேற்றனா்.