அரவக்குறிச்சியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி
அரவக்குறிச்சியில் தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை பிரிவு சாா்பில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி பேரூராட்சி அலுவலகம் வரை சென்றது.
பேரணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்ட பொறியாளா் அழகா்சாமி தொடங்கி வைத்தாா். இதில் அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளா் வினோத்குமாா் மற்றும் சாலைப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.