அரசுப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின உறுதிமொழியேற்பு
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சாகுல் அமீது தலைமை வகித்தாா். ஆசிரியை புவனேஸ்வரி பெண் கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து சிறப்புரையாற்றினாா். இறுதியாக பெண் குழந்தைகள் தின உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனா்.
இதில், ஆசிரியைகள் ஷகிலாபானு, ராபியா பஸ்ரி, ரொகையாபீவி, கவிதா, உஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மகிழ் முற்றம் குழு செயலா் சகாயவில்சன் நன்றி கூறினாா். நிறைவாக பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.