தமிழகத்தில் ஜன. 29 முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஜன. 29, 30 ஆகிய தேதிகளில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, சனிக்கிழமை முதல் ஜன. 28 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வட வானிலை நிலவும். அதைத் தொடா்ந்து ஜன. 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன. 25 காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 88 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.