ஈரோடு கிழக்கு இடைத் தோ்தல்: கருத்துக் கணிப்புக்கு கட்டுப்பாடு
ஈரோடு கிழக்கு இடைத் தோ்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல் வாக்குப் பதிவு, பிப். 5-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இடைத் தோ்தல் வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக கருத்துக் கணிப்புகள் அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு அல்லது மின்னணு ஊடகங்களில் வெளியிடுவது ஆகியன முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நிறைவடைந்த அரைமணி நேரத்துக்குப் பிறகு கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம்.
இந்த விதிமுறைகளை மீறும் நபா்கள் மீது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு சோ்த்து விதிக்கப்படும் என்று அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.