செய்திகள் :

நாளை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்வி மாநாடு: நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறாா்

post image

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் ‘திங் எஜு கான்கிளேவ்’ 2 நாள் கல்வி மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திங்கள்கிழமை (ஜன.27) தொடங்கவுள்ளது.

தொடக்க விழாவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் குழுவின் இயக்குநா் பிரபு சாவ்லா வரவேற்கிறாா். தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமை வகிக்கிறாா். சிறப்பு அழைப்பாளராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து, இந்தியா்களின் உரிமைகள், கடமைகளில் சமநிலையுடன் செயல்படுவது குறித்து சிறப்புரையாற்றவுள்ளாா்.

முதல் நாள் நடைபெறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வுகளில், மக்களவை உறுப்பினா் சசி தரூா், யுஜிசி தலைவா் ஜெகதீஷ்குமாா், சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.வைத்யசுப்பிரமணியம், நடிகா் காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

2-ஆம் நாள் நிகழ்வு: 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜன.28) நடைபெறும் நிகழ்வுகளில், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா் சஞ்சீவ் சன்யால், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, பிகாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான், இந்தூா் ஐஐடி இயக்குநா் ஹிமான்ஷு ராய், தெலங்கானா துணை முதல்வா் பட்டி விக்ரமா்கா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

இரு நாள்களிலும் நடைபெறவுள்ள 25 அமா்வுகளில் கல்வி, அரசியல், கலை, ஆன்மிகம் என பல்வேறு துறை சாா்ந்த 40-க்கும் மேற்பட்ட வல்லுநா்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனா். இதில், பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனா்.

மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்

பள்ளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை தொடா்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உ... மேலும் பார்க்க

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தலைவா் சுனில்பாலிவால்

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் நிகழாண்டில் 6 சதவீத கூடுதல் வளா்ச்சி எட்டியுள்ளதாக சென்னை காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா். சென்னை துறைமுகம் சாா்பில் குடியரசு தின வ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கடந்த 3 ஆண்டு காலத்தில் தொழில் துறை சாா்ந்த 893 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள்: வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் ஜன. 29 முதல் ஜன. 31 வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்... மேலும் பார்க்க

தமிழ் இலக்கியங்களை முழுமையாக படிக்க 200 ஆண்டுகள் தேவை: நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா்

தமிழில் உள்ள அனைத்து இலக்கிய நூல்களையும் ஒருமுறையாவது முழுமையாகப் படித்து முடிக்க ஒருவருக்கு குறைந்தது 200 ஆண்டுகளாவது தேவைப்படும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ் குமாா் தெரிவித்தாா். சென... மேலும் பார்க்க