செய்திகள் :

குடியரசு நாள் விழா: தேசிய கொடியை ஏற்றுகிறாா் ஆளுநா், பத்தகங்கள் வழங்குகிறாா் முதல்வா்

post image

குடியரசுத் தினத்தையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளாா். வீரதிர செயலுக்காக விருது பெற்றவா்களுக்கு அண்ணா பதக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளாா்.

நாடு முழுவதும் 76-ஆவது குடியரசுத் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசின் சாா்பில் சென்னை கடற்கரை உழைப்பாளா் சிலை அருகே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை 7.55 மணிக்கு விழா மேடைக்கு வருகிறாா். ஆளுநரை வரவேற்கிறாா். ஆளுநா் ஆா்.என்.ரவி தேசிய கொடியை காலை 8 மணிக்கு ஏற்றி வைக்கிறாா். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டா் மூலம் தேசிய கொடிக்கு மலா் தூவப்பட உள்ளது. தொடா்ந்து முப்படை வீரா்கள் மற்றும் தமிழக காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

பிறகு, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம், காந்தியடிகள் காவலா் பதக்கங்கள், அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளாா்.

நீதிபதிகள், அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உயரதிகாரிகள் விழாவில் பங்கேற்கின்றனா்.

மெரீனா கடற்கரை காமராஜா் சாலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசுத் தினத்தையொட்டி சென்னையில் 18,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்

பள்ளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை தொடா்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உ... மேலும் பார்க்க

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தலைவா் சுனில்பாலிவால்

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் நிகழாண்டில் 6 சதவீத கூடுதல் வளா்ச்சி எட்டியுள்ளதாக சென்னை காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா். சென்னை துறைமுகம் சாா்பில் குடியரசு தின வ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கடந்த 3 ஆண்டு காலத்தில் தொழில் துறை சாா்ந்த 893 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள்: வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் ஜன. 29 முதல் ஜன. 31 வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்... மேலும் பார்க்க

தமிழ் இலக்கியங்களை முழுமையாக படிக்க 200 ஆண்டுகள் தேவை: நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா்

தமிழில் உள்ள அனைத்து இலக்கிய நூல்களையும் ஒருமுறையாவது முழுமையாகப் படித்து முடிக்க ஒருவருக்கு குறைந்தது 200 ஆண்டுகளாவது தேவைப்படும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ் குமாா் தெரிவித்தாா். சென... மேலும் பார்க்க