மூட்டையில் தங்கம், பணம்: மங்களூருவில் கொள்ளை; நெல்லையில் பதுக்கல் - கொள்ளையர்கள்...
தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு..!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரத்தை சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கே கடற்படை கப்பலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மேற்கண்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்ததுடன், அவர்களது 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.