அரியலூா் மாவட்டத்தில் இன்று மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு நிகழ்வு
அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு, அப்புறப்படுத்தப்படும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது:
இந்த விழிப்புணா்வு நிகழ்வில் சேகரிக்கப்படும் நெகிழிக் கழிவுகள், மறு சுழற்சிக்கு அல்லது சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்த அனுப்புவதன் மூலம் நீா், நிலம், காற்று மற்றும் கடல் பகுதிகள் நெகிழிக் கழிவுகளால் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள், துப்புரவுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு நெகிழிக் கழிவுகளை சேகரிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருள்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்த்து அதற்கு பதிலாக சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்று பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.