பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபையில் 11ஆவது முறையாக தீர்மானம்!
தேசிய பெண் குழந்தைகள் தினம் அரியலூா் ஆட்சியரகத்தில் உறுதிமொழியேற்பு
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் அனுராப்பூ நடராஜமணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஸ்ரீஜா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி மற்றும் மாவட்ட நிலை அலுவலா்கள் உள்ளிட்டோா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
பின்னா் ஆட்சியா் ரத்தினசாமி, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் கையெழுத்து பிரசாரத்தை தொடங்கிவைத்தாா்.