சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தல...
மொழிப்போா் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவிப்பு
மொழிப்போா் தியாகிகள் தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
கீழப்பழுவூா் புதிய பேருந்து நிலையத்திலுள்ள மொழிப் போா் தியாகி சின்னசாமி சிலைக்கு, திமுக சாா்பில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பாளை.அமரமூா்த்தி, அதிமுக மாவட்ட மாணவா் அணி செயலா் முல்லை அகிலன் தலைமையில் முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ப. இளவழகன், ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், மதிமுக மாவட்டச் செயலா் ராமநாதன் தலைமையில் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, தமிழா் நீதிக் கட்சி நிறுவனா் சுபா.இளவரசன், தேமுதிக மாவட்டச் செயலா் இராம.ஜெயவேல், அமமுக மாவட்டச் செயலா் துரை.மணிவேல், திருமானூா் ஒன்றியச் செயலா் வடிவேல் முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா்அங்கனூா் சிவா, தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் சிவக்குமாா், பாமகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்வுகளில் அந்தந்த கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.