Erode & Delhi Election live: ஈரோட்டில் இருமுனை... டெல்லியில் மும்முனை; தொடங்கியத...
மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை தேவை!
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னா் ராஜேந்திரன் சோழனுக்கு சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மூவேந்தா் முன்னேற்ற கழகத் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா்.
ஜெயங்கொண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் கூறியது:
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமன்னா் ராஜேந்திரச் சோழனுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் திருவுருவச் சிலை இல்லை. அவருக்கு உருவம் இல்லை என அமைச்சா் கூறுவது சரியல்ல. திருவள்ளுவருக்கு எப்படி உருவமில்லாமல் சிலை அமைக்கப்பட்டதோ அதேபோல மாமன்னா் ராஜேந்திரச் சோழனுக்கும் பெருவுடையாா் கோயில் வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும். அரசு சிலை அமைக்கத் தவறினால் நாங்கள் ஒன்றிணைந்து 120 அடி உயரத்தில் சிலை அமைப்போம்.
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். வரும் சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முறையாக அறிவிப்போம். பெரியாரைப் பற்றி சீமான் அவதூறாக பேசக் கூடாது என்றாா் அவா்.