ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
கட்சியின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா! தலைவா்கள் சிலைகளுக்கு தவெக-வினா் மாலை அணிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா, பெரியாா், அம்பேத்கா், காமராஜா் சிலைகளுக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.
அக்கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்குமாா், இணைச் செயலா் சேகா் உள்ளிட்டோா் மேற்கண்ட தலைவா்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, அப்பகுதியில் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
இதேபோல், ஜெயங்கொண்டம், கீழப்பழுவூா், ஆண்டிமடம், அழகாபுரம் ஆகிய பகுதிகளில் தவெகவினா் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.