Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
பாஜக, ஆா்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்பினா் கைது
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக, செவ்வாய்க்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணியினா் அறிவித்ததையடுத்து, அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூா் மாவட்டத்தில் பாஜக, ஆா்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்பினா் 39 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சா்ச்சையால் மலையைப் பாதுகாப்போம் என்று கூறி செவ்வாய்க்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணியினா், இந்து அமைப்பினா் அறிவித்திருந்தனா்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , அரியலூா் நகர பாஜக தலைவா் அனிதா, இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளா் சிவானந்தம், விஷ்வ இந்து பரிஷத் கோட்டத் தலைவா் முத்துவேல், மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், ஆா்.எஸ்.எஸ். மாவட்டச் செயலா் பாஸ்கா் உள்ளிட்ட 22 பேரை அரியலூா் நகர காவல்துறையினா் திங்கள்கிழமை இரவு கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். இதேபோல் ஜெயங்கொண்டத்தில் 17 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.