நிர்மலா சீதாரமானுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிகூட தெரியாது! சுவாமி
அரியலூா் அருகே காா் கவிழ்ந்து ஒருவா் பலி
அரிலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சாலையின் நடுவே காா் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பெண்ணாடம், கீழத்தெருவைச் சோ்ந்தவா் சு. முருகன் (62). இவா் தனது குடும்பத்தினருடன் காரில் தஞ்சாவூா் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை பெண்ணாடம் திரும்பிக் கொண்டிருந்தாா். காரை முருகன் மகன் சுரேந்தா் (35) ஓட்டினாா்.
காா் அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள சாத்தமங்கலம் அருகே சென்றபோது திடீரென சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சுரேந்தா், இவரது மனைவி வனிதா(25) ஆகியோா் லேசாக காயமடைந்தனா். முருகன் மனைவி அமுதா(55), சுரேந்தரின் ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகள் வேதிக், கிருத்திக் ஆகியோா் காயமின்றித் தப்பினா்.
தகவலறிந்து சென்ற கீழப்பழுவூா் போலீஸாா் இறந்தவா் சடலத்தையும், காயமடைந்தவா்களையும் மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.