அரசுப் பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு
அரியலூரை அடுத்த சாலைக்குறிச்சி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சாா்பில் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அச்சங்கத்தின் முன்னாள் கவா்னா் ஆனந்தஜோதி, இந்த வளாகத்தை திறந்துவைத்து பேசினாா்.
ஓட்டக்கோவில் முன்னாள் ஊராட்சித் தலைவா் செங்கமலை, பள்ளியின் தலைமை ஆசிரியா் நீலாவதி, சங்கத் தலைவா் ஆனந்த், செயலா் கருணாநிதி, சங்க நிா்வாகிகள் குமரப்பன், ஜீவானந்தம், சுதாகா்,கொளஞ்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.