செய்திகள் :

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

post image

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக ஹரி ஹரநாத சர்ம மற்றும் ஓய். லக்ஷமன ராஷ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீரஜ் சிங் தாக்கூர் புதிய கூடுதல் நீதிபதிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைததார்.

ஆந்திர உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட இரண்டு புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30ஐ எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், சர்மா மற்றும் ராவ் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக உயர்த்த பரிந்துரைத்தது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் டி ஸ்ரீனிவாஸ் மற்றும் பலர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் பலி?

பாகிஸ்தான் காவல்துறையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர் கராச்சி சிறையில் உயிரிழந்தார்.இந்தியாவைச் சேர்ந்த மீனவர் பாபுவை 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், சிறைக்க... மேலும் பார்க்க

லட்ச ரூபாய் முதலீட்டில் கோடிகளை அளித்த 2 நிறுவனங்கள்!

மெர்க்குரி இவி டெக் லிமிடெட் மற்றும் பிரவேக் லிமிடெட் நிறுவனங்கள், தங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் அளித்துள்ளது.மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான மெர்க்குரி இவி டெக் லிமிடெட் (Mercury EV-Tech Limi... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணத்துக்குக் காரணம் விஷம்?

ரஜெளரி/ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தின் பின்னணியில் விஷம்தான் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருப்பதாக... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்குச் செல்ல வேண்டுமா? குஜராத் அரசின் சுற்றுலாத் தொகுப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவைப் பார்வையிடத் திட்டமிடும் மக்களுக்கு குஜராத் அரசு சிறப்பு சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா ... மேலும் பார்க்க

உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். உத்தரகண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அ... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் வழக்கு! கைதானவருக்கு போலீஸ் காவல் மேலும் நீட்டிப்பு

நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் கைதான ஷரீஃபுல்லுக்கு போலீஸ் காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷரீஃபுல்லி காவல் முடிவடைந்ததையடுத்து அவர் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜ... மேலும் பார்க்க