செய்திகள் :

``கைகளில் உருட்டுக் கட்டைகளுடன்.." -த.பெ.தி.க புகார்; சீமான் மீது வழக்குப்பதிவு!

post image

சென்னை அயனாவரம் போர்சியஸ் தெருவைச் சேர்ந்தவர் விஜய் என்கிற ஜனார்தனன் (42). இவர், நீலாங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தி்ல் மாநில ஊடக பிரிவு செயலாளராக கடந்த 6 வருடமாக இருந்துவருகிறேன். கடந்த 22-ம் தேதி சுமார் 11.30 மணியளவில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக நடத்த இருந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள நீலாங்கரை பகுதிக்கு வந்தேன். அப்போது, போராட்டம் நடக்கும் இடம் தெரியாமல் வழிதவறி சின்னநீலாங்கரை சந்திப் அவென்யூ 2-வது மெயின் ரோட்டிலிருந்து ECR மெயின் ரோட்டிற்கு தெருவழியாக வந்துக்கொண்டிருந்தேன்.

நாம் தமிழர்

அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு அவரும் , அவருடைய ஆதரவாளர்களும் இருந்தனர். அவர்கள் ஈ.வெ.ரா பெரியார் குறித்து கோஷங்களை எழுப்பியதோடு கைகளில் உருட்டு கட்டைகளையும் வைத்திருந்தனர். பெரியார் உணர்வாளர்களையும், பொதுமக்களையும் தாக்கும் நோக்கத்திலும் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் முறையிலும் கூடி இருந்த அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் நீலாங்கரை போலீஸார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட சிலர் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 189(4) 126(2) 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Iraq: ``பெண்களின் திருமண வயது 9'' -குழந்தை திருமணத்தை சட்டபூர்வமாக்கிய ஈராக்...

குழந்தை திருமணத்தை ஆதரித்து ஈராக்கில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்பது வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் திருமணத்தை அனுமதிக்கும் சட்டத்தை ஈராக் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில், 'இச்சட்ட... மேலும் பார்க்க

Trump: ``அமெரிக்காவில் உற்பத்தி செய்தால், உலகிலேயே குறைவான வரி.." -டிரம்ப் சொல்வதென்ன?

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின், முதல் முறையாக உலக பொருளாதார மன்றத்தில் பேசியுள்ளார். அதில், உலக பொருளாதாரம் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.பல தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து - அண்ணாமலை கொடுத்த ரியாக்‌ஷன்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உலகத்தின் தொன்மையான மொழி தமிழ். இதை பிரதமரும் சொல்லி வருகிறார். சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ். இர... மேலும் பார்க்க

Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?

Doctor Vikatan: என்7 வயதுக்குழந்தைக்கு மயோனைஸ் என்றால் மிகவும் பிடிக்கிறது. பிரெட், சப்பாத்தி என எல்லா உணவுகளுடனும் மயோனைஸ் வைத்துதான் சாப்பிடுகிறான். கடைகளில் வாங்கும் மயோனைஸ்தான் தருகிறேன். இது ஆரோக... மேலும் பார்க்க

திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் எம்.பி கதிர்ஆனந்த். பிடிபட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்தும் கேள்விகள் அடுக்கப்பட்டது. பெரும்பாலும், தெரியும்...தெரியாது, ஆம்...... மேலும் பார்க்க