செய்திகள் :

Ind v Eng: 'அஷ்வினுடன் என்னை ஒப்பிடுவதே பெருமைதான்!'- சேப்பாக்கத்தில் வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி

post image
இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறவிருக்கிறது. போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி வருகை தந்திருந்தார்.
Varun Chakaravarthy

அவர் பேசுகையில், 'ரொம்ப நாட்கள் கழித்து சென்னையில் ஆடப்போகிறேன். உள்ளூர் மக்களுக்கு முன்பாகவும் பெற்றோருக்கு முன்பாகவும் ஆடுவதில் பெரும் மகிழ்ச்சி.டி20 இல் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். பென்ச்சிலுமே திறமையான வீரர்கள் நிறையவே இருக்கிறார்கள்.சரியான நேரத்தில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு என்னை அணியிலிருந்து டிராப் செய்தார்கள்.

அது என்னை இன்னும் உழைக்க வைத்தது. இன்னும் என்னுடைய பந்துவீச்சில் மாற்றங்களை கொண்டு வர வைத்தது.ஒரு பேட்டர் ஆடும் விதத்தை பற்றி நிறைய வீடியோக்களை பார்ப்பேன். அவர்கள் என்ன மாதிரியான ஷாட்களை ஆடுகிறார் என ஆய்ந்து அதற்கேற்ப அவருக்கு எதிரான திட்டங்களை தீட்டுவேன்.

அஷ்வினோடு என்னை ஒப்பிட்டு பேசுவதே பெருமையாக இருக்கிறது. அஷ்வின் மூன்று பார்மட்களிலும் இந்திய அணிக்காக ஆடியவர்.

Varun Chakaravarthy

நான் ஒரே ஒரு பார்மட்டில்தான் ஆடி வருகிறேன். இப்போதுதான் கம்பேக் கொடுத்திருக்கிறேன். அஷ்வினுடன் ஒப்பிடும் அளவுக்கு நான் வளரவில்லை. நீண்ட காலத்திற்கு இந்திய அணியில் ஆட என்ன செய்ய வேண்டுமோ அதில்தான் என்னுடைய கவனம் முழுவதும் இருக்கிறது.போட்டிக்கு முன்பாக திட்டமிடுவதில்தான் அனலிஸ்டுகளுடன் அதிகமான நேரத்தை செலவிடுவேன்.

பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் சூர்யகுமார் யாதவும் என் மீது எந்த விதமான அதீத அழுத்தமும் ஏறாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

கடந்த 6-7 மாதங்களாக பேட்டிங்கிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். கொல்கத்தாவுக்கு ஆடிய போது அபிஷேக் நாயரிடமிருந்துதான் தீவிரமாக பேட்டிங்கை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இன்னும் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.' என்றார் வருண் சக்கரவர்த்தி.

இந்தியா வென்ற முதல் போட்டியில் வருண் சக்கரவர்த்திதான் ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்; அதிர்ச்சி வீடியோ - முதல்வர் தலையிட வலியுறுத்தல்

பஞ்சாப்பில் குரு காஷி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் கபடி போட்டியில், தமிழ்நாட்டின் அன்னை தெரசா பல்கலைக்கழக அணிக்கும், தர்பாங்கா பல்கலைக்கழக அணிக்கும் நடைபெற்ற போட்டியில், தமிழக வீராங்கனைகள் மீது த... மேலும் பார்க்க

கபடி மாதிரிதான் ஆனா கபடி இல்ல! - Atya Patya Game Explainer

சர்வதேச அளவில் ஆடப்படும் Atya Patya ஆட்டத்திற்கு தமிழகத்தில் போதிய வெளிச்சம் இல்லை. கபடி பாணியில் கொஞ்சம் வித்தியாசமாக ஆடப்படும் இந்த Atya Patya ஆட்டத்தை பற்றி அதை ஆடும் வீரர் வீராங்கனைகளிடமும் பயிற்ச... மேலும் பார்க்க

Ranji Trophy : 'வெறும் 20 நிமிடங்களில் அவுட் ஆன ரோஹித்' - இந்திய ஸ்டார்களின் ரஞ்சி சோகம்!

நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. ரோஹித் சர்மா, ஜடேஜா,ஜெய்ஸ்வால், கில் என இந்திய அணியின் ஸ்டார்களும் இன்று ரஞ்சியில் களமிறங்கியிருக்கின்றனர். ஆன... மேலும் பார்க்க

Arun Vijay : 'என் பசங்களும் மெடல் ஜெயிச்சு போடியம்ல ஏறணும்!' - தந்தையாக உருகிய அருண் விஜய்

டெல்லியில் நடந்த ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் குதிரையேற்ற போட்டியில் 18 பதக்கங்களை வென்று வந்த தமிழகத்தின் இளம் வீரர்களுக்கு சென்னை குதிரையேற்ற மையம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சிறப்பு விரு... மேலும் பார்க்க

Ind Vs Eng : 'கம்பீர் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்!' - பூரித்த சூர்யகுமார்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 தொடர் ஈடன் கார்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பௌலிங்கில் வருண் சக்கரவர்த்தியும் பேட்... மேலும் பார்க்க