செய்திகள் :

Arun Vijay : 'என் பசங்களும் மெடல் ஜெயிச்சு போடியம்ல ஏறணும்!' - தந்தையாக உருகிய அருண் விஜய்

post image
டெல்லியில் நடந்த ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் குதிரையேற்ற போட்டியில் 18 பதக்கங்களை வென்று வந்த தமிழகத்தின் இளம் வீரர்களுக்கு சென்னை குதிரையேற்ற மையம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய் வெற்றி பெற்றவர்களை பாராட்டியதோடு குதிரைகளை ஓட்டியும் மகிழ்ந்தார்.
Arun Vijay

நிகழ்வில் அருண் விஜய் பேசியதாவது, ''எனக்கு குதிரைகளை ரொம்பவே பிடிக்கும். குதிரை ஓட்டவும் தெரியும். கோத்தகிரியில் பள்ளியில் படித்த போதுதான் குதிரை ஓட்ட கற்றுக்கொண்டேன். அப்போது ரேஸ் கோர்ஸிலிருந்து இரண்டு குதிரைகளை எங்களுடைய பள்ளிக்கு கொண்டு வந்திருந்தார்கள். முதல் முறையாக அந்த குதிரைகளின் மீது ஏறி அமர்ந்த போது அத்தனை புத்துணர்ச்சியாக இருந்தது. குதிரைகளுடன் பழகுவது கடினமான விஷயம். ஆனால், பழகிவிட்டால் அது நல்ல அனுபவமாக இருக்கும். இங்கே தேசிய அளவிலான போட்டிகளுக்கு சென்று 18 பதக்கங்களை வென்று வந்திருக்கிறார்கள். அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. தமிழ்நாட்டில் இந்த 'Equestrian' விளையாட்டு வளர்ந்து வருகிறது. என்னுடைய குழந்தைகளும் இங்கேதான் இரண்டு வருடமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரே இடத்தில் 80 க்கும் மேற்பட்ட குதிரைகளை பராமரித்து சிறப்பான முறையில் பயிற்சியளித்து வருகிறார்கள். ஒரு நாள் என்னுடைய குழந்தைகளும் இதே மாதிரி பதக்கங்களை வென்று போடியத்தில் ஏறி நிற்க வேண்டும் என விரும்புகிறேன்." என்றார்.

Arun Vijay

மேலும் பேசியவர், ``வணங்கான் படம் பெரிய வெற்றியை அடைந்திருப்பதில் மகிழ்ச்சி. எல்லா புகழும் பாலா சாருக்குதான் செல்ல வேண்டும். என் மீது கூடுதல் பொறுப்பு ஏறியிருப்பதாக உணர்கிறேன். இன்னும் பெரிய பெரிய படங்களாக மக்களுக்குப் பிடிக்கும் வகையில் செய்து அவர்களை ஈர்க்க வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.

Ranji Trophy : 'வெறும் 20 நிமிடங்களில் அவுட் ஆன ரோஹித்' - இந்திய ஸ்டார்களின் ரஞ்சி சோகம்!

நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. ரோஹித் சர்மா, ஜடேஜா,ஜெய்ஸ்வால், கில் என இந்திய அணியின் ஸ்டார்களும் இன்று ரஞ்சியில் களமிறங்கியிருக்கின்றனர். ஆன... மேலும் பார்க்க

Ind Vs Eng : 'கம்பீர் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்!' - பூரித்த சூர்யகுமார்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 தொடர் ஈடன் கார்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பௌலிங்கில் வருண் சக்கரவர்த்தியும் பேட்... மேலும் பார்க்க

Ind vs Eng : 'மேன் ஆப் தி மேட்ச் வருண்; வெளுத்தெடுத்த அபிஷேக்!' - இந்தியா எப்படி வென்றது?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி மிக எளிதாக வென்றிருக்கிறது. போட்டி ... மேலும் பார்க்க

F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?

உலகப் புகழ் பெற்ற கார் பந்தயமாக F1 ரேசில் முதல் பெண் ரேஸ் இஞ்ஜினீயராக தேர்வாகியிருக்கிறார் லாரா முல்லர்.ஜெர்மனியைச் சேர்ந்த லாரா, ஹாஸ் நிறுவனத்தின் சார்பாக அவர்களது குழுவில் முதன்முறை ஓட்டுநராக அறிமுக... மேலும் பார்க்க

Samantha: "சென்னைதான் எனக்கு எல்லாத்தையும் கற்றுக் கொடுத்துச்சு..." - சமந்தா நெகிழ்ச்சி

'World Pickle Ball' எனும் லீகில் ஒரு பிக்கிள் பால் டீமை நடிகை சமந்தா வாங்கியிருக்கிறார். சென்னையை மையமாகக் கொண்டு, 'சென்னை சூப்பர் சாம்ப்ஸ்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அணிக்கு சத்யபாமா பல்கலைக்க... மேலும் பார்க்க