செய்திகள் :

Ind Vs Eng : 'கம்பீர் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்!' - பூரித்த சூர்யகுமார்

post image
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 தொடர் ஈடன் கார்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பௌலிங்கில் வருண் சக்கரவர்த்தியும் பேட்டிங்கில் அபிஷேக் சர்மாவும் கலக்கினர். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார், 'கோச் கவுதம் கம்பீர் எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.' என பூரித்து பேசியிருக்கிறார்.
SKY

சூர்யகுமார் யாதவ் பேசியதாவது, 'டாஸை வென்று நாங்கள் போட்டியை தொடங்கிய விதமே சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு பௌலரும் அவரவருக்கென ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு அதை களத்தில் சிறப்பாகவும் செயல்படுத்தினார்கள். மூன்று ஸ்பின்னர்களை கொண்டு ஆடியதை பற்றி கேட்கிறீர்கள். அதுதான் எங்களின் பலம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கூட அப்படித்தான் ஆடியிருந்தோம். புதிய பந்தில் பந்துவீசும் பொறுப்பை ஹர்திக் ஏற்றுக் கொண்டார். அதனால் என்னால் கூடுதலாக ஒரு ஸ்பின்னரை வைத்து ஆட முடிகிறது. வருண் சக்கரவர்த்தி தன்னுடைய பௌலிங்கை ரொம்பவே எளிமையாக வைத்திருக்கிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கு தெரிகிறது.

அதை மனதில் வைத்துக் கொண்டு தெளிவாக பயிற்சிகளை மேற்கொள்கிறார். அதுதான் அவரை சிறப்பான வீரராக மாற்றுகிறது. அர்ஷ்தீப் சிங் அனுபவத்தின் வழி நிறைய கற்றுக்கொள்கிறார். கூடுதல் பொறுப்புகளையும் தன் மீது சுமந்து கொள்கிறார். கவுதம் கம்பீர் எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

SKY

2024 டி20 உலகக்கோப்பையில் ஆடியதை விட கொஞ்சம் வித்தியாசமாக ஆட வேண்டும் என்பதுதான் எங்களின் திட்டம். பீல்டிங் கோச்சுடன் இணைந்து தீவிரமாக பயிற்சி மேற்கொள்கிறோம். சிறிய வாய்ப்பிருந்தாலும் அதை கேட்ச்சாக மாற்ற கடுமையாக முயற்சிக்கிறோம். அதுதான் எங்களின் பீல்டிங்கை தரமானதாக மாற்றுகிறது.' என்றார்.

Ranji Trophy : 'வெறும் 20 நிமிடங்களில் அவுட் ஆன ரோஹித்' - இந்திய ஸ்டார்களின் ரஞ்சி சோகம்!

நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. ரோஹித் சர்மா, ஜடேஜா,ஜெய்ஸ்வால், கில் என இந்திய அணியின் ஸ்டார்களும் இன்று ரஞ்சியில் களமிறங்கியிருக்கின்றனர். ஆன... மேலும் பார்க்க

Arun Vijay : 'என் பசங்களும் மெடல் ஜெயிச்சு போடியம்ல ஏறணும்!' - தந்தையாக உருகிய அருண் விஜய்

டெல்லியில் நடந்த ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் குதிரையேற்ற போட்டியில் 18 பதக்கங்களை வென்று வந்த தமிழகத்தின் இளம் வீரர்களுக்கு சென்னை குதிரையேற்ற மையம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சிறப்பு விரு... மேலும் பார்க்க

Ind vs Eng : 'மேன் ஆப் தி மேட்ச் வருண்; வெளுத்தெடுத்த அபிஷேக்!' - இந்தியா எப்படி வென்றது?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி மிக எளிதாக வென்றிருக்கிறது. போட்டி ... மேலும் பார்க்க

F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?

உலகப் புகழ் பெற்ற கார் பந்தயமாக F1 ரேசில் முதல் பெண் ரேஸ் இஞ்ஜினீயராக தேர்வாகியிருக்கிறார் லாரா முல்லர்.ஜெர்மனியைச் சேர்ந்த லாரா, ஹாஸ் நிறுவனத்தின் சார்பாக அவர்களது குழுவில் முதன்முறை ஓட்டுநராக அறிமுக... மேலும் பார்க்க

Samantha: "சென்னைதான் எனக்கு எல்லாத்தையும் கற்றுக் கொடுத்துச்சு..." - சமந்தா நெகிழ்ச்சி

'World Pickle Ball' எனும் லீகில் ஒரு பிக்கிள் பால் டீமை நடிகை சமந்தா வாங்கியிருக்கிறார். சென்னையை மையமாகக் கொண்டு, 'சென்னை சூப்பர் சாம்ப்ஸ்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அணிக்கு சத்யபாமா பல்கலைக்க... மேலும் பார்க்க