செய்திகள் :

எஸ்கே - 25 படத்தின் பெயர் இதுவா?

post image

சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ. 60 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: தெலுங்கில் வெளியாகும் மதகஜராஜா..!

இதைத் தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தன் 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் தன் 25-வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கு ‘பராசக்தி’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டிற்குத் தயாராகும் துல்கர் சல்மானின் காந்தா!

நடிகர் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் பெரிய வெ... மேலும் பார்க்க

ரியல் மாட்ரிட்தான் உலகின் சிறந்த கிளப்..! வினிசியஸ் பெருமிதம்!

ஆர்பி சால்ஸ்பர்க் உடனான சாம்பியன் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 5-1 என வெற்றி பெற்றது.ரோட்ரிகோ (23’, 34’) 2 கோல்கள், கிளியன் எம்பாப்பே (48’) 1 கோலும் வினிசியஸ் ஜூனியர் (55’,77’) 2 கோல்களும் அடித்... மேலும் பார்க்க

ரியல் மாட்ரிட் அணிக்காக 100 கோல்கள் அடித்த வினிசியஸ் ஜூனியர்!

ஆர்பி சால்ஸ்பர்க் உடனான சாம்பியன் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 5-1 என வெற்றி பெற்றது. இதில் வினிசியஸ் ஜூனியர் ரியல் மாட்ரிட் அணிக்காக தனது 100ஆவது கோலை அடித்தது அசத்தினார். ரோட்ரிகோ (23’, 34’) 2... மேலும் பார்க்க

தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுத... மேலும் பார்க்க

கவினின் கிஸ் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் கவின் நடிப்பில் உருவாகும் கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல... மேலும் பார்க்க

நீ பெரிய அறிவாளியா? மிஷ்கினை கண்டித்த அருள்தாஸ்!

இயக்குநர் மிஷ்கினை நடிகர் அருள்தாஸ் கடுமையாகக் கண்டித்து பேசியுள்ளார். பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பலர் பேசினர். ஆனால், இயக்குநர் மி... மேலும் பார்க்க