செய்திகள் :

டீ விற்றவரின் வதந்தியே மகாராஷ்டிர ரயில் விபத்துக்குக் காரணம்: அஜித் பவார்

post image

மகாராஷ்டிரத்தின் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் டீ விற்பவர் ஏற்படுத்திய வதந்தியின் விளைவுதான் இந்த ரயில் விபத்து என்று மகாரஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.

லக்னெளவில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகப் பரவிய வதந்தியால், பயணிகள் சிலர் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னா், பெட்டியிலிருந்து அவசரமாகக் கீழே இறங்கி, அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றிருந்தனர்.

அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த பெங்களூரு-தில்லி இடையிலான கர்நாடக விரைவு ரயில், பயணிகள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 13 போ் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே புணேவில் செய்தியாளர்களிடம் பேசிய பவார்,

ரயிலில் உள்ள கேட்டீனில் டீ விற்பனையாளர் ஒருவர் ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பற்றியதாகக் கூச்சலிட்டார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷ்ரவஸ்தியைச் சேர்ந்த இரண்டு பயணிகள் அதைக் கேட்டு, ரயிலில் பொருத்தப்பட்டிருந்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பொதுப் பெட்டியிலிருந்த அனைவருக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

சக பயணிகளிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், ரயில் நின்றதும் சிலர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டு பக்கங்களிலிருந்தும் ரயிலில் இருந்து குதித்தனர். அருகிலுள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது.

தீ விபத்து பற்றிய வதந்தியின் விளைவுதான் இந்த விபத்து என்று அவர் கூறினார். உயிரிழந்த 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்ட காவல்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், சிறிது நேரம் கழித்து இரு திசைகளிலும் ரயில்களின் இயக்கம் மீண்டும் தொடங்கியது.

ஒற்றுமை, நல்லிணக்கத்தை எடுத்துச் சொல்லும் மகா கும்பமேளா: அமித் ஷா

மகா கும்பத்தை விட உலகில் வேறெந்த நிகழ்வும் நல்லிணக்கம் ஒற்றுமையின் சக்திவாய்ந்த செய்தியைத் தெரிவிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார். குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில்... மேலும் பார்க்க

ஒரே மேடையில் சரத் பவார் - அஜித் பவார்! என்ன நடக்கிறது?

தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரய துணை முதல்வரும் உறவினருமான அஜித் பவாருடன் ஒரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் கலந்துகொண்டார்.வசந்த்ததா சர்க்கரை மையத்தில் இன்று நடைபெற்ற ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர ரயில் விபத்து: ராகுல் இரங்கல்!

மகாராஷ்டிர ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் அவசரமாக கீழே ... மேலும் பார்க்க

வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்-க்கு மட்டும் புதிய திட்டங்களை அறிவித்த ஜியோ, ஏர்டெல்!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் டேட்டா இன்றி வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதிக்கான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களையே பயன்பாட்டில் ... மேலும் பார்க்க

தில்லியில் வேலையில்லா திண்டாட்டம் முடிவுக்கு வரும்: கேஜரிவால் உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தலைநகரில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம் மோனலிசா!

துடிப்பான பார்வை, அலட்சியமான புன்னகை, பயமில்லாத பேச்சால் பார்ப்பவர்களைக் கவரும் அழகிய இளம்பெண் மோனி போஸ்லே, சமூக ஊடகத்தால், ஒரே நாளில் உலகம் அறியும் அழகியாக மாறியிருக்கிறார். மகா கும்பமேளாவுக்கு வந்து... மேலும் பார்க்க