குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
ஒற்றுமை, நல்லிணக்கத்தை எடுத்துச் சொல்லும் மகா கும்பமேளா: அமித் ஷா
மகா கும்பத்தை விட உலகில் வேறெந்த நிகழ்வும் நல்லிணக்கம் ஒற்றுமையின் சக்திவாய்ந்த செய்தியைத் தெரிவிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.
குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில் ஹந்து ஆத்யாத்மிக் சேவா எனப்படும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது,
பல்வேறு நாடுகளிலிருந்து தூதர்கள் கும்பமளாவுக்கு அழைப்பு அட்டைகளை தன்னிடம் கோரியதாகவும், அதற்கு இந்த மாபெரும் கூட்டத்திற்கு முறையான அழைப்பு ஏதும் இல்லை. ஏனென்றால் கோள்களின் சீரமைப்பின்படி 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரும் மதத் திருவிழாவில் கோடிக்கணக்கான மக்கள் தாங்களாகவே இங்குக் கூடுகிறார்கள் என்று அவர் கூறினார்.
40 கோடி மக்கள் அழைப்பின்றி ஒரே இடத்தில் கூடுவதை அவர்களால் நம்ப முடியவில்லை, பெரியளவிலான இந்த நிகழ்வை யார் ஏற்பாடு செய்கிறார்கள் என்று கேட்டபோது, “மதத் தலைவர்கள், புனிதர்கள் மற்றும் அவர்களின் அமைப்புகள் கும்பத்தில் கூடும் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய மாநில அரசும் தேவையான நடவடிக்கைகள் முழு அளவில் செய்வதாக அவர் தெரிவித்தார்.
மகா கும்பத்தை விட உலகில் வேறு எந்த நிகழ்வும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் சக்திவாய்ந்த செய்தியைத் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் கும்பத்திற்கு வருவோர் யாரும் நீங்கள் எந்த மதம், ஜாதி என்று யாரும் கேட்பதில்லை. பாரபட்சமின்றி உணவு பெற்று புனித நீராடியபின் மகிழ்ச்சியோடு வீடு திரும்புகிறார்கள்.
கும்பத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் கூடினாலும், கங்கைக் கரையில் உள்ள கூடாரங்களில் அனைவருக்கும் தங்கும் வசதி இருப்பதால், யாரும் உணவகங்களில் தங்குவதில்லை என்றும் அவர் கூறினார்.
முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோதும், இதுபோன்ற ஏற்பாடுகள் பல ஆண்டுகளாக இருந்துள்ளன, குஜராத் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், மகா கும்பத்தைப் பார்வையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஜனவரி 27-ல் கங்கையில் புனித நீராட மகா கும்பத்திற்கு வரவிருப்பதாக அவர் கூறினார்.