செய்திகள் :

``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா

post image

நேதாஜியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக  மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

  "நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் தமிழர்கள் பெருவாரியாக இருந்தார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரும் பங்காற்றினார். அதனால் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி வருகிறோம்.

ஹெச்.ராஜா

காரைக்குடியில் தமிழக முதல்வர் நிலை தடுமாறி பேசி உள்ளார். வள்ளுவரையும் வள்ளலாரையும் களவாட பார்க்கிறார்கள் என்று பேசியுள்ளார். களவாடுவது, கள்ள ரயிலில் செல்வது திராவிட ஸ்டாக்குகளின் வழக்கம். வள்ளுவர் யார்? வள்ளலார் யார்? அடிப்படை ஞானம் இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். அறம் பொருள் இன்பம் வீடு என்ற சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தான் திருக்குறள் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறப்புக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று வள்ளுவர் சொன்னதும் கீதையில் கண்ணன் சொல்வதும் ஒன்றே. நான்கு வர்ணங்களைப் பற்றி வள்ளுவர் எழுதியிருக்கிறார். வள்ளுவரை விட சனாதனி உண்டா? பல இடங்களில் ஹிந்து தெய்வங்களைப் பற்றி வள்ளுவர் பேசியுள்ளார். திருக்குறளை தங்க தட்டில் இருக்கும் மலம் என்று பெரியார் பேசினார். வள்ளலார் திருநீறில்லாமல் இருந்திருக்கிறாரா? முருகன் தோத்திரத்தையும், மகாதேவ மாலை என்று சிவனைப் பற்றி எழுதியிருக்கிறார்.

வள்ளலார் பெருமகனாரை விட மிகச்சிறந்த ஹிந்து உண்டா? விவரமில்லாத உதயநிதி ஸ்டாலின், சனாதன இந்து தர்மத்தை அழிப்பேன் என்று இழிவாகப் பேசினார். அதற்காக அவர் மீது நாடு முழுவதும் பல வழக்குகள் உள்ளது. சனாதனம் என்று சொன்னால் இந்து மதம் என்று உச்ச நீதிமன்றமே சொல்லியுள்ளது. அதனால் களவாடுவது, கள்ள ரயில் ஏறி வருவது போன்ற திராவிட மாடலோட நாங்கள் போட்டி போட வரவில்லை. முதல்வர் சரியாக பேச வேண்டும். உங்களை விட களவாணி கூட்டம் இல்லை.

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். அறிவிக்க தாமதம் ஆனால் என்ன, குடிகெட்டுப் போய்விடுமா? நீட் கொண்டு வந்தது திமுக அமைச்சர் காந்தி செல்வன், அதற்கு எதிராக பேசுகிறார்களா? ஹைட்ரோ கார்பன் எடுக்க கையெழுத்து போட்டவர் மு.க.ஸ்டாலின். ஆனால், கடைசியில் மக்களிடம் நடிப்பார்கள். அதுபோல் அரிட்டாபட்டி திட்டத்திலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் திமுக அரசு நடந்துகொண்டது. எப்படியும் மத்திய அரசு ஹட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தியது போல டங்ஸ்டன் திட்டத்தை நிறுத்திவிடும்.

சீமான் - ஹெச்.ராஜா

பரந்தூருக்கு சென்ற விஜய், தான் முன்னேற்றத்திற்கு எதிரானவன் அல்ல என்று பேசுகிறார், விமான நிலையம் வேண்டும், ஆனால் பரந்தூரில் வேண்டாம் என்கிறார். விமான நிலையத்தை எங்கு கொண்டு வரவேண்டும் என்று விஜய், விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்தால், மத்திய அரசு அங்கு விமான நிலையத்தை அமைக்கும். என்ன நடக்குது தமிழ்நாட்டில், எல்லா அரசியல்வாதிகளும் தற்குறிகள். அவர்களுக்கு பிரச்னைகள் புரிவதில்லை. நாங்கள் தற்குறிகளுக்கு எதிராக எதிர் நீச்சல் போட வேண்டியுள்ளது.

" சீமான் பெரியார் குறித்து பேசுவதற்கு பின்னணியில் பாஜக உள்ளதா? என்ற கேள்விக்கு,  "சந்தேகமே இல்லாமல் ஈவெராவைப் பற்றி முதன் முதலில் பேசியது ஹெச்.ராஜாதான், 2013-ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் ஈவெரா ஒரு தேச துரோகி என்று பற்றி பேசினேன். ஏனென்றால், 1947 ஆகஸ்ட் 15 துக்க தினம், கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்று சொல்லிய ஈ.வெ.ரா ஒரு தேச துரோகி. அது மட்டுமல்ல, தமிழ் விரோதி, தமிழ் மீது பற்று உள்ள எவரும் குச்சியால் கூட ஈவெராவை தொட மாட்டான், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழை படிக்காதீர்கள் தமிழிலை படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது, வேலைக்காரியோடு ஆங்கிலத்தில் பேசு, பொண்டாட்டியோடு ஆங்கிலத்தில் பேசு என்று பேசிய ஈவெரா, பட்டியலின மக்களின் முதல் எதிரி.

ஹெச்.ராஜா

மீனாட்சியம்மன் கோயில் நுழைவு போராட்டம் வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்தபோது பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் போகக்கூடாது, அப்படி போனால் சூத்திரன் பார்ப்பான் அளவிற்கு உயர மாட்டான் என்று பேசியவர் ஈவெரா. ஏற்றத்தாழ்வில் நம்பிக்கை கொண்டவர் ஈவெரா. இவர்கள் சமூக நீதி பேசலாமா?

    சாமி சிதம்பரனார் எழுதிய புத்தகத்தில் ஈவெரா விலைமாதர் வீடுகளுக்கு நண்பரோடு போவார் என்று எழுதியுள்ளார். அதனால்தான் இன்று கூட்டு பலாத்காரம் நடக்கிறது. பெண்களை போகப்பொருளாக அடிமையாக வைத்திருந்தவரைத்தான் பெரியார் என்கிறோம். இது சாமி சிதம்பரனார் எழுதியது, வழக்கு போடுவதாக இருந்தால் அவர் மீது போடுங்கள். அதனால் ஈவெராவைப் பற்றி முதலில் பேசியது ஹெச்.ராஜாதான். சீமான் பேசுவதை ஆதரிக்கிறேன். அவர் வீட்டை முற்றுக்கையிட்டது முட்டாள்களின் செயல்..." என்றார்.

திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் எம்.பி கதிர்ஆனந்த். பிடிபட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்தும் கேள்விகள் அடுக்கப்பட்டது. பெரும்பாலும், தெரியும்...தெரியாது, ஆம்...... மேலும் பார்க்க

EPS சுற்றுப்பயணம்: அறிவித்த சில நிமிடங்களில் ஒத்திவைப்பு - ஏன்? | இரும்பின் தொன்மை | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* “தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” - முதல்வர் ஸ்டாலின் * தமிழரின் தொன்மையைப் பாருங்கள்! - சு.வெ பெருமிதம்! * கீழடி இணையதளத்தைத் தொடங்கி வைத்த மு... மேலும் பார்க்க

``தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா..?'' -சைஃப் அலிகான் நடனம்; பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!

மகாராஷ்டிராவில், எப்போதும் சர்ச்சையாக பேசுவதை வழக்கமாக கொண்டவர் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் நிதேஷ் ரானே. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் மகனாவார். தற்போது புனேயில் நடந்த பொதுக்கூட்... மேலும் பார்க்க

``மீண்டும் பொய் வாக்குறுதி கொடுப்பார்கள்; மக்கள் ஏமாறக்கூடாது..'' -முன்னாள் அமைச்சர் தங்கமணி

தஞ்சை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-ம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாநகர செயலாளர் சரவணன் தலைமையில் தஞ்சை, தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று நடைபெற... மேலும் பார்க்க

``ரெய்டு எல்லாம் வேண்டாம், பேசினாலே போதும்..'' -அதிமுக உடனான கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன்

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.ரெய்டு மூலம் அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர நெருக்கடி ... மேலும் பார்க்க

Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு... முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்

நேற்றைய தினம் (ஜனவரி 20) அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க் முதல் அம்பானி வரை முதலாளிகள் புடை சூழ நடைபெற்றது பதவியேற்பு.அமெரிக்க ... மேலும் பார்க்க