செய்திகள் :

``தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா..?'' -சைஃப் அலிகான் நடனம்; பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!

post image

மகாராஷ்டிராவில், எப்போதும் சர்ச்சையாக பேசுவதை வழக்கமாக கொண்டவர் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் நிதேஷ் ரானே. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் மகனாவார்.

தற்போது புனேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நிதேஷ் ரானே, நடிகர் சைஃப் அலிகானை குப்பை என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ''பங்களாதேஷிகள் மும்பையில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதற்கு முன்பு அவர்கள் ரோடு தடுப்புக்கு வெளியில் நின்றார்கள். ஆனால் இப்போது அவர்கள் வீட்டிற்குள் வர ஆரம்பித்துவிட்டார்கள். அவரை (சைஃப்) தூக்கிச்செல்ல வந்திருக்கலாம். அது நல்லது. குப்பைகளை அகற்றவேண்டும்.

சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரும்போது நடனமாடிக்கொண்டே வருகிறார். இதனால் அவர் உண்மையிலேயே பிளேடால் தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது. அவர் பேசிக்கொண்டே நடனமாடிக்கொண்டு வெளியில் வருகிறார்.

முஸ்லிம் நடிகர்களுக்கு எதாவது பிரச்னை என்றால் ஒவ்வொரு அரசியல்வாதியும் உதவ ஓடிவருகின்றனர். அதேசமயம் ஒரு இந்து நடிகர் பாதிக்கப்பட்டால் அவ்வாறு செய்வதில்லை.

ஷாருக்கான், சைஃப் அலிகான் என எந்த கான் பாதிக்கப்பட்டாலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர அவாத், சுப்ரியா சுலே கவலைப்பட ஆரம்பித்து விடுகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங் சித்ரவதை செய்யப்பட்டபோது யாரும் கவலைப்படவில்லை" என்று பேசினார்.

சைஃப் அலிகான் - Saif Ali Khan

இதற்கு முன்பு சிவசேனா (உத்தவ்) கட்சி எம்.பி. சஞ்சய் ராவுத்தும் இதே சந்தேகத்தை கிளப்பி இருந்தார். இது தொடர்பாக அவர் அளித்திருந்த பேட்டியில், ''இந்த சம்பவத்திற்குப் பிறகு, மும்பையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, உள்துறை அமைச்சகம் தோல்வியடைந்துவிட்டது, மகாராஷ்டிரா அரசு சீர்குலைந்துவிட்டது, மும்பையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பது போன்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால், சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த விதத்தை பார்க்கும்போது, நான்கு நாள்களுக்கு முன்பு எதுவும் நடக்காதது போல் தெரிகிறது.சைஃப் அலிகான் குடும்பத்தினர் இதை வெளிப்படுத்த வேண்டும். ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த ஒருவர் நான்கு நாள்களுக்குள் இவ்வளவு நல்ல நிலையில் வெளியே வர முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா

நேதாஜியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். "நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் தமிழர்கள் பெருவாரியாக இருந்தார்கள்.... மேலும் பார்க்க

``மீண்டும் பொய் வாக்குறுதி கொடுப்பார்கள்; மக்கள் ஏமாறக்கூடாது..'' -முன்னாள் அமைச்சர் தங்கமணி

தஞ்சை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-ம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாநகர செயலாளர் சரவணன் தலைமையில் தஞ்சை, தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று நடைபெற... மேலும் பார்க்க

``ரெய்டு எல்லாம் வேண்டாம், பேசினாலே போதும்..'' -அதிமுக உடனான கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன்

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.ரெய்டு மூலம் அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர நெருக்கடி ... மேலும் பார்க்க

Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு... முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்

நேற்றைய தினம் (ஜனவரி 20) அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க் முதல் அம்பானி வரை முதலாளிகள் புடை சூழ நடைபெற்றது பதவியேற்பு.அமெரிக்க ... மேலும் பார்க்க

`பிரபாகரன் உடனான போட்டோ எடிட்டிங் விவகாரம்' -செய்தியாளர்கள் கேள்விக்கு சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை அடுத்த பூரிக்குடிசை கிராமத்தில் 'கள் விடுதலை மாநாடு' நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

America: இரண்டே மாதத்தில் DOGE பொறுப்பிலிருந்து விலகிய விவேக் ராமசாமி!? - காரணம் என்ன?

குடியரசுக் கட்சி சார்பாக, பல தடைகளைக் கடந்து டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்றிருக்கிறார். அதே கட்சியைச் சேர்ந்த, கேரள மாநிலம், வடக்கன் சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமியும் அதிபர... மேலும் பார்க்க