வெளியீட்டிற்குத் தயாராகும் துல்கர் சல்மானின் காந்தா!
நடிகர் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது காந்தா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை செல்வராஜ் செல்வமணி இயக்க பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாகவும் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ராணா டக்குபதி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதையும் படிக்க: கவினின் கிஸ் படப்பிடிப்பு நிறைவு!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், இன்னும் முதல் பார்வை போஸ்டரே வெளியாகவில்லை.
இந்த நிலையில், இன்னும் சில வாரங்களில் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து மே மாத வெளியீடாகத் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.