தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: ராகுல் பெருமிதம்
இன்னொரு லப்பர் பந்து! பாராட்டுகளைப் பெறும் குடும்பஸ்தன்!
நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற படத்தில் நடிகர் மணிகண்டன் நடித்து முடித்துள்ளார்.
சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்துக்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: ர தீர சூரன் வெளியீட்டுத் தேதி!
இப்படம் நாளை (ஜன. 24) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது.
படத்தைப் பார்த்தவர்கள் இந்தாண்டின் சிறந்த படமாக இருக்கும் என்றும் லப்பர் பந்து திரைப்படம்போல் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்றும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.