ஆரணி நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் அதிகாரிகளுடன் ...
ரோஹித் சர்மாவின் விக்கெட்டை கொண்டாடாத பந்துவீச்சாளர்; காரணம் என்ன?
ரஞ்சி கோப்பையில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு, அதனைக் கொண்டாடாததற்கான காரணத்தை பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டது.
இதனையடுத்து, மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகின்றனர். இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் போன்றோரும் ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிக்க: வருண் சக்கரவர்த்திக்கு அபிஷேக் சர்மா பாராட்டு!
ரஞ்சி கோப்பையில் மும்பை - ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (ஜனவரி 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், ரோஹித் சர்மா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கொண்டாடாதது ஏன்?
ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை ஜம்மு - காஷ்மீர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் உமர் நசீர் மிர் வீழ்த்தினார். இருப்பினும், ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்தியதை அவர் கொண்டாடவில்லை.
ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை கொண்டாடாதது குறித்து உமர் நசீர் மிர் கூறியதாவது: சிறப்பான பந்து என்பது எந்த ஒரு வீரருக்கு எதிராக வீசினாலும் சிறப்பான பந்தே. அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதெல்லாம் முக்கியமில்லை. ஆனால், ரோஹித் சர்மாவின் விக்கெட் மிகவும் பெரிய விக்கெட். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதையும் படிக்க: தோல்விக்கு காரணம் என்ன? விளக்கமளித்த ஜோஸ் பட்லர்!
ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்தியவுடன் எனது மனதுக்குள் முதலில் தோன்றிய விஷயம் இதுதான். ஒரு ரசிகனாக அவரது விக்கெட்டினை வீழ்த்தியதை நான் கொண்டாடவில்லை. அவரது விக்கெட்டினை வீழ்த்தியபோதும், அவர் மிகப் பெரிய வீரர். நான் ரோஹித் சர்மாவின் மிகப் பெரிய ரசிகன். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால், அது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கும். ஏனெனில், நாங்கள் இந்திய அணியின் கேப்டன் விளையாடும் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளோம் என்ற மகிழ்ச்சி இருக்கும் என்றார்.