செய்திகள் :

மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி சூப்பர் 6 சுற்றுக்கு இந்தியா தகுதி!

post image

மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கையை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.

19 வயதுட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

இந்தியா - 118/9

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை கொங்கடி த்ரிஷாவை தவிர்த்து, மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. சிறப்பாக விளையாடிய கொங்கடி த்ரிஷா 44 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் அரைசதம் குவிக்கத் தவறினார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மிதிலா வினோத் 16 ரன்களும், ஜோஷிதா 14 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க:2-வது டி20: இங்கிலாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

இலங்கை தரப்பில் பிரமுடி மேத்சரா, லிமன்சா திலகரத்ண, அசெனி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ராஷ்மிகா, சமோடி மற்றும் மனூடி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சூப்பர் 6 சுற்றுக்குத் தகுதி

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் ராஷ்மிகா செவ்வந்தி அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் ஷப்னம், ஜோஷிதா மற்றும் பருணிகா சிசோடியா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆயுஷி சுக்லா மற்றும் வைஷ்ணவி சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொங்கடி த்ரிஷாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: ரஞ்சி கோப்பையில் சொதப்பிய ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால்!

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவிலிருந்து சூப்பர் 6 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ரோஹித் சர்மாவின் விக்கெட்டை கொண்டாடாத பந்துவீச்சாளர்; காரணம் என்ன?

ரஞ்சி கோப்பையில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு, அதனைக் கொண்டாடாததற்கான காரணத்தை பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொட... மேலும் பார்க்க

வருண் சக்கரவர்த்திக்கு அபிஷேக் சர்மா பாராட்டு!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்க... மேலும் பார்க்க

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 23) நடைபெ... மேலும் பார்க்க

தோல்விக்கு காரணம் என்ன? விளக்கமளித்த ஜோஸ் பட்லர்!

இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன... மேலும் பார்க்க

2-வது டி20: இங்கிலாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 23... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பையில் சொதப்பிய ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால்!

ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் ரோஹித், ஜெய்ஸ்வால் மோசமாக விளையாடி ஆட்டமிழந்தார்கள். இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா 3 ரன்களுக்கும் மற்றுமொரு... மேலும் பார்க்க