செய்திகள் :

ரஞ்சி கோப்பையில் சொதப்பிய ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால்!

post image

ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் ரோஹித், ஜெய்ஸ்வால் மோசமாக விளையாடி ஆட்டமிழந்தார்கள்.

இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா 3 ரன்களுக்கும் மற்றுமொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பார்டர் கவாஸ்கர் தொடரில் 1-3 என தோல்வியடைந்த இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ரோஹித், கோலி ஓய்வு பெற பலரும் கருத்து தெரிவிக்க அடுத்ததாக உள்ளூர் போட்டிகளில் விளையாடும்படி பிசிசிஐ பரிந்துரைந்தது.

இதிலும் விராட் கோலி பங்கேற்காமல் ஏமாற்றம் அளித்தார். ரோஹித், ஜெய்ஸ்வால் மும்பை அணியில் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்கள்.

ஆகிப் நபி ஓவரில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். ரோஹித் ஆட்டமிழந்த விதம்தான் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

ரஹானே (12), ஷ்ரேயாஷ் ஐயர் (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். ஷிவம் துபே டக்கவுட்டானர். மும்பை சார்பில் ஷர்துல் தாக்குர் மட்டுமே சிறப்பாக விளையாடி 51* ரன்கள் எடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சார்பில் உமர் நஜிர் 4, யுதிர் சிங் 3, ஆகிப் நபி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

மும்பை அணி 33 ஓவர் முடிவில் 129/9 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ரஞ்சி கோப்பையில் பேட்ஸ்மேன்கள் சொதப்பல்; ஜடேஜா அசத்தல்!

ரஞ்சி கோப்பையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ரவீந்திர ஜடேஜா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவின் விக்கெட்டை கொண்டாடாத பந்துவீச்சாளர்; காரணம் என்ன?

ரஞ்சி கோப்பையில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு, அதனைக் கொண்டாடாததற்கான காரணத்தை பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொட... மேலும் பார்க்க

வருண் சக்கரவர்த்திக்கு அபிஷேக் சர்மா பாராட்டு!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்க... மேலும் பார்க்க

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 23) நடைபெ... மேலும் பார்க்க

தோல்விக்கு காரணம் என்ன? விளக்கமளித்த ஜோஸ் பட்லர்!

இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன... மேலும் பார்க்க

மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி சூப்பர் 6 சுற்றுக்கு இந்தியா தகுதி!

மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கையை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.19 வயதுட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப... மேலும் பார்க்க