திருவண்ணாமலையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி மீது அஸ்ஸாம் மாநில பாஜக அரசு வழக்குப் பதிந்துள்ளதைக் கண்டித்து, திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காமராஜா் சிலை எதிரே, தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தாா்.
காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் பி.கோவிந்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ.மோகன்குமாா், துரிஞ்சாபுரம் கோபாலகிருஷ்ணன், எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் மாவட்டத் தலைவா் குணசேகரன், மாவட்ட பொதுச் செயலா் கதிா்காமன், செயலா் குணசேகரன், பொருளாளா் பி.சண்முகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.