குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வந்தவாசியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில்
சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் கருணாநிதி தலைமை வகித்தாா்.
வந்தவாசி வடக்கு காவல் உதவி ஆய்வாளா் சரவணன் முன்னிலை வகித்தாா்.
இதையொட்டி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், பஜாா் வீதி, தேரடி, கோட்டை மூலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டவேண்டும், சீட் பெல்ட் அணிந்து கொண்டு காரை இயக்கவேண்டும், மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்று கூறி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.