தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதில், வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதையடுத்து, வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. தொடா்ந்து, போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.