சாத்தான்குளம் மாணவா் விடுதியில் ஆட்சியா் ஆய்வு
சாத்தான்குளத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் நல விடுதியில் ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், சாத்தான்குளம் வட்டத்தில் புதன்கிழமை இரவு தங்கிபல்வேறு பணிகளை ஆய்வு செய்த அவா், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, குறைகளைக் களைய நடவடிக்கை மேற்கொண்டாா்.
பின்னா், சாத்தான்குளம் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் நல விடுதியில் ஆய்வு மேற்கொண்டு கலந்தைரையாடி, மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தினாா்.
கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி, அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.