செய்திகள் :

தில்லியில் அடா் மூடுபனி: விமானங்கள், ரயில்கள் தாமதம்!

post image

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அடா் மூடுபனி நிலவியது. இதைத் தொடா்ந்து, விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாகின. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

தில்லியில் இரண்டு வாரங்களுக்கு மேலாக கடும் குளிா் நிலவி வருகிறது. நகரம் முழுவதும் மூடுபனி சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சவால்களை எதிா்கொண்டுள்ளனா். காண்புதிறன் குறைந்ததால் விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்படுகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட அடா்ந்த மூடுபனி, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தைப் பாதித்தது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் காண்பு திறன் குறைவாக இருந்ததன் காரணமாக பல விமானங்கள் தாமதமாகின. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. பல ரயில்கள் தாமதமாகின.

இதற்கிடையே, நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க |எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த கடத்தப்பட்ட பெண் மீட்பு !

தலைநகரில் காலை 7 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 207 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன.

வாரணாசி மற்றும் அயோத்தி உள்பட உத்தரப்பிரதேசத்தின் பல நகரங்களைச் சுற்றி அடா் மூடுபனி நிலவியது.வாரணாசி மற்றும் அயோத்தியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

வாரணாசியில் பிற்பகலில் தெளிவான மேகமூட்டம் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக வெப்பநிலை குறைந்து குளிர் அதிகமாக உள்ளது.மேலும் அடா் மூடுபனி நிலவுவதாக வாரணாசியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்சிலும் அடர்த்தியான அடா் மூடுபனி காணப்பட்டது, இதனால் காண்புதிறன் குறைந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சவால்களை எதிா்கொண்டுள்ளனா்.

’சின்ன மருமகள்’ ஒளிபரப்பு நேரம் மாற்றம்! அய்யனார் துணை சீரியல் எப்போது?

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், சின்ன மருமகள் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.எதிர்நீச்சல் தொடரில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மதுமிதா நடிக்கும் அய்யனார் து... மேலும் பார்க்க

சென்னை 2-வது பெரிய மெட்ரோ நிலையமாக உருவாகும் பனகல் பூங்கா!

சென்னையின் 2-வது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பூங்கா மெட்ரோ நிலையம் தயாராகி வருகிறது.சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகள் பனகல் பூங்கா பகுதியில் நடைபெற்று வருகின்றன. பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்த... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது திரு. மாணிக்கம்!

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரு.மாணிக்கம் படம் ஓடிடியில் வெளியானது.நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து வெளியான திரைப்படம் திரு.மாணிக்கம். இவருக்கு ஜோடியாக ‘நா... மேலும் பார்க்க

காவல்துறையை கண்டித்து நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி பள்ளி மாணவி தற்கொலை மிரட்டல்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே, மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவியை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரமாக மீட்டனர்.கோவில்பட்டி வட... மேலும் பார்க்க

மங்களூரு வங்கிக் கொள்ளையா் வீட்டில் போலீசார் சோதனை: பணம், நகை பறிமுதல்

மங்களூரு அருகே துப்பாக்கி முனையில் வங்கியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி வீட்டில் மங்களூர் போலீசார் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை சோதனை நடத்தி... மேலும் பார்க்க

உத்தரகாண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:உத்தரகண்ட் மாந... மேலும் பார்க்க