காவல்துறையை கண்டித்து நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி பள்ளி மாணவி தற்கொலை மிரட்டல்
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே, மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவியை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரமாக மீட்டனர்.
கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கார் ஓட்டுநரான இவருக்கும் இவரது சகோதரர்கள் அஜய் குமார் மற்றும் வேல்முருகன் ஆகியோருக்கும் தனியார் நிதி நிறுவனத்தின் கடன் மூலம் கார் வாங்கியது தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வேல்முருகன் மனைவி ஜோதியும், மாவட்ட காவல் அலுவலகத்தில்
கார்த்திகேயன் மனைவி மரகதவள்ளியும் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில்,போலீஸ் அதிகாரிகள் விசாரணை சரியாக இல்லையெனவும், காரை ஒரு தரப்பு அபகரித்து விட்டதாகவும், இதனால் தங்களது குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மங்களூரு வங்கிக் கொள்ளையா் வீட்டில் போலீசார் சோதனை: பணம், நகை பறிமுதல்
இந்த நிலையில், பிளஸ் 1 படித்து வரும் கார் ஓட்டுநரான கார்த்திகேயனின் மகள் வெள்ளிக்கிழமை(ஜன.24) காலையில் கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் மூக்கரை விநாயகர் கோவில் அருகே சுமார் 10 மீட்டர் உயர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று, கோரிக்கையை வலியுறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்தார் .
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் அரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் மாணவி தன்யாவை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தீயணைப்புத் துறையினர் கீழே இறக்கி பத்திரமாக மீட்டனர்.
இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.